காசி விஸ்வநாதர் கோவிலில் கிரீடம் மற்றும் தங்கத் தாலி திருட்டு - மர்ம நபருக்கு வலைவீச்சு!

கடலூர் காசி விஸ்வநாதர் கோவிலில் வெள்ளி கிரீடம் மற்றும் தங்கத் தாலி திருட்டு போகிறது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார்.

Update: 2023-01-10 01:04 GMT

கடலூர் ஜவான்பவான் சாலையில் ஆற்றங்கரையோரம் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலை திறப்பதற்காக நேற்று பூசாரி கோவிலுக்கு வருகை தந்தார். அப்பொழுது இரும்பு கேட் உடைக்கப்பட்டு கோவில் திறந்து இருப்பது தெரியவந்தது. மேலும் இரண்டு மர கதவு பூட்டுகளும், பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து பூசாரி பீரோவை திறந்து பார்த்த பொழுது தான் அவருக்கு மேலும் அதிர்ச்சி கிடைத்தது.


அங்கு சாமிக்கு பயன்படுத்தும் இரண்டு வெள்ளி கிரீடங்கள் மற்றும் தாலி சங்கிலியை காணவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இதனுடைய மதிப்பு சுமார் 70,000 இருக்கும் என்றும் கூறப் பட்டிருக்கிறது. மேலும் திருட்டு போயிருப்பதை அறிந்த பூசாரி போலீஸ் நிலையத்தில் சென்று இது தொடர்பாக புகார் ஒன்றையும் பதிவு செய்து இருக்கிறார். குறிப்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து இருக்கிறார்கள்.


மேலும் இது பற்றி ஆய்வு செய்த போலீசார் கடைசியில் முகமூடி அணிந்த ஒரு மர்ம நபர் தான் கோவிலுக்குள் வந்து இரும்பு பூட்டை உடைத்து பீரோவை திறந்து சாமியின் நகைகளை திருடி சென்று இருக்கிறான் என்பது தெரிய வந்து இருக்கிறது. எனவே தற்போது முகமூடிக்கொள்ள எனக்கு போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். மர்ம நபரை கண்டுபிடிக்கும் வரை சுவாமி விஸ்வநாதரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:



Tags:    

Similar News