'தென்திருப்பதி' திருவேங்கடமுடையான் கோவில் அருகே அரபி பாடசாலை என்ற பெயரில் பள்ளிவாசல் - கொதித்த இந்து அமைப்பினர்

அரியக்குடி கோவில் வீடு அருகே அரபிக் பாடசாலை திறப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Update: 2022-10-17 10:16 GMT

அரியக்குடி கோவில் வீடு அருகே அரபிக் பாடசாலை திறப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காரைக்குடி அருகே அரியக்குடியில் கோவில் வீடு அருகே அரபி பாடசாலை என்ற பெயரில் பள்ளிவாசல் திறப்பதற்கு பொதுமக்கள், ஹிந்து அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் தென்திருப்பதி என பெயர் பெற்ற திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே அரபி பாடசாலை எனக் கூறி பள்ளிவாசல் திறக்க உள்ளதாக அக்டோபர் 5ம் தேதி இந்து அமைப்புகள் குவிந்தனர்.

தாசில்தார் மாணிக்கவாசகம், டி.எஸ்.பி வினோ ஜி ஆகியோர் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். அப்பொழுது கோவில் அனுமதி பெற்ற பின்னரே திறக்க வேண்டும் என கண்டிப்பாக தெரிவித்துவிட்டனர் அதற்க்கு போலீசாரும் சரி என்றதால் அப்பொழுது கூட்டம் கலைந்து சென்றது.

இதனிடையே நேற்று தடையை மீறி அரபி பாடசாலை என்ற பெயரில் பள்ளிவாசல் திறப்பதை அறிந்த பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர் அப் குதியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இது குறித்து காரைக்குடி டி.எஸ்.பி வினோத் கூறியதாவது, 'பாடசாலை திறக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அதனை பள்ளிவாசல் போல் பயன்படுத்தினால் புகார் அளிக்கலாம்' என்றார். ஆனால் இந்து அமைப்பினர் அங்கு பள்ளிவாசல் திறக்கப்படுவதாக புகார் எழுப்பியுள்ளனர்.  


Source - Dinamalar

Similar News