தமிழகத்தில் இருந்து சுரண்டி எடுக்கப்பட்டு, கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வளங்கள்!
மணல், ஜல்லி கற்கள், குண்டு கற்கள், எம் சாண்ட் போன்ற கனிம வளங்கள், தமிழகத்தில் இருந்து தினமும் கேரளாவிற்கு நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் தென்காசி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விதிகளை மீறி செல்லும் லாரிகளால் போக்குவரத்து நெருக்கடி, சாலைகள் சேதம், பல விபத்துகளும் ஏற்படுகிறது. இதனை கண்டித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு சமூக பாதுகாப்பு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்திலிருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் கனிம வளங்களை கேரளாவுக்குக் கொண்டு செல்லும் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மிகப்பெரிய அளவில் மக்களை திரட்டி போராட போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Inputs From: News 18