தஞ்சை: கொடிக்கம்பம் அமைப்பதில் விடுதலை சிறுத்தை மோதல் ! 2 சப்இன்ஸ்பெக்டர் உட்பட 20 பேர் காயம் !

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கும் இடையே கற்களை வீசி தாக்குதல் நடத்தி கொண்டதில் இரண்டு சப்இன்ஸ்பெக்டர் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர்.

Update: 2021-10-19 05:40 GMT

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கும் இடையே கற்களை வீசி தாக்குதல் நடத்தி கொண்டதில் இரண்டு சப்இன்ஸ்பெக்டர் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர். தஞ்சாவூர், கபிஸ்தலம் மண்ணி ஆற்று பாலத்தின் அருகே பொது இடத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது அங்கு மற்றொரு தரப்பினர் கொடிக்கம்பம் நடவேண்டாம் என கூறியுள்ளனர். இதனையடுத்து அங்கு திருவிடைமருதூர் வட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு தரப்பிற்கும் உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (அக்டோபர் 18) மாலை மண்ணி ஆற்றுப்பாலம் அருகே விசிகவுக்கும் மற்றொரு தரப்பிற்கும் வாக்குவதம் ஏற்பட்டு பின்னர் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மெலட்டூர் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் கபிஸ்தலம் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் மற்றும் 4 காவலர்கள் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த சப்இன்ஸ்பெக்டர் உட்பட 10 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும், மீதியிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் சேலம் மாவட்டத்தில் விசிகவினர் கொடிக்கம்பம் நடுவதில் பிரச்சனை ஏற்படுத்தினர் தற்போது மீண்டும் தஞ்சையில் பிரச்சனையை கிளப்பியுள்ளனர். இவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பாமக உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalamurai



Tags:    

Similar News