தஞ்சாவூர் அருகே ஆற்றில் விழுந்த பேருந்து.!
பேருந்து பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நசுவினி ஆற்றில் விழுந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து முற்பகல் பேருந்து ஒன்று சென்னைக்கு புறப்பட்டு சென்றது. அந்த பேருந்தில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
பேருந்து பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நசுவினி ஆற்றில் விழுந்தது.
அப்போது பேருந்தில் இருந்தவர்கள் அலறிதுடித்து இறங்கி வெளியே ஓடிவந்துள்ளனர். அதில் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.