மழை நீரில் மூழ்கிய 2000 ஏக்கர் நெற்பயிர்: கவலையில் தஞ்சை விவசாயிகள்!

தஞ்சாவூர் மாவட்டம், அன்னப்பன்பேட்டை, நரியனூர், கோணியக்குறிச்சி, மெலட்டூர், திட்டை உள்ளிட்ட ஊர்களில் நாற்று நட்டு சுமார் 15 நாட்களே ஆன 2000 ஏக்கர் விலைநிலங்கள் மழை நீரில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வயலில் மழை நீர் தேங்கியிருப்பதால் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளது.

Update: 2021-10-13 13:07 GMT

தற்போது பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் வாய்க்காலை மட்டும் தூர் வாரிவிட்டு, வடிகால் வாய்க்காலை தூர்வாராமல் விட்டுள்ளனர். இதனால் பெய்த கனமழையினால் வயல்களில் தேங்கிய மழை நீர் வடியாமல் அப்படியே தேங்கியுள்ளது. இதனால் நாற்றங்களில் பறித்த நாட்களை நடவு செய்ய முடியாமல் கடந்த 4 நாட்களாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும், மழை நீரில் மூழ்கி நாற்றுக்கள் இருப்பதாலும், இளம் நாற்றுக்கள் அனைத்தும் அழுகியுள்ளது. இதன் காரணமாக ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே வடிகால் கால்வாய்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தூர்வாரி தண்ணீர் செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக் நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source, Image Courtesy: News 18

Tags:    

Similar News