மதமாற்றத்தால் பள்ளி மாணவி தற்கொலை: சி.பி.ஐ. வழக்குப்பதிந்து ஆட்டத்தை துவக்கியுள்ளது!

Update: 2022-02-15 13:56 GMT

தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டியில் இயங்கி வந்த தூய இருதய கிறிஸ்தவ பள்ளியில் மதமாற்றத்தால் 12ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது.

இதனிடையே இந்த வழக்கை தமிழக போலீசான சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்தது. ஆனால் இதில் உடன்பாடு இல்லாத பெற்றோர் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றமும் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அங்கும் திமுக அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டது. வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை இன்று பதிவு செய்துள்ளது. அதாவது குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டுதல், குற்றம் முயற்சி செய்தல், சிறார் நீதி சட்டத்தின் படி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கால் மதமாற்றும் கும்பலுக்கு மிகப்பெரிய சவுக்கடியாக அமைந்துள்ளது என்பது மாற்றுக்கருத்தில்லை.

Source: Daily Thanthi

Image Courtesy: The Print

Tags:    

Similar News