குப்பைமேட்டில் கிடைத்த 100 கிராம் தங்கத்தை போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்!
சென்னை, திருவொற்றியூரில் உள்ள குப்பை மேட்டில் கிடைத்த 100 கிராம் தங்க நாணயத்தை காவல் நிலையத்தில் தூய்மைப் பணியாளர் ஒப்படைத்துள்ளார்.
சென்னை, திருவொற்றியூரில் உள்ள குப்பை மேட்டில் கிடைத்த 100 கிராம் தங்க நாணயத்தை காவல் நிலையத்தில் தூய்மைப் பணியாளர் ஒப்படைத்துள்ளார்.
சென்னை, திருவொற்றியூர் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் கணேஷ் ராமன். இவர் கடந்த மார்ச் மாதம் 100 கிராம் தங்க நாணயத்தை வாங்கியுள்ளார். வீட்டில் அதனை ஒரு பழைய பையில் போட்டு வைத்துள்ளார். அந்த தங்க நாணயத்தை குடும்பத்தார் தவறுதலாக குப்பையுடன் சேர்த்து வெளியில் போட்டுள்ளனர். இது பற்றி கேள்விப்பட்ட கணேஷ் ராமன் அதிர்ச்சியடைந்து சாத்தங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், திருவொற்றியூர் நகராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் மேரியின் கண்களில் அந்த பை கிடைத்துள்ளது. அதில் 100 கிராம் தங்க நாணயம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அவர் தனது மேற்பார்வையாளரிடம் மேரி சாத்தாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது சேவையை போலீசார் உட்பட பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். பலர் தங்களுக்கு கீழே கிடைக்கும் பொருளை காவல் நிலையத்தில் ஒப்படைப்பது என்பது அரிதாக உள்ளது. இவரை பார்த்து பலர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalamurai