கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வால் கட்டுமானத்துறை முடங்கும் ! - பொறியாளர் சங்கத் தலைவர் அதிர்ச்சி தகவல்!

சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை உயர்வால் கட்டுமான துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2021-10-25 12:23 GMT

சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை உயர்வால் கட்டுமான துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தி பின்னர் கட்டுமான பொருள்களின் விலை தாறுமாறாக ஏறிவிட்டது. இதனால் கட்டுமானத் தொழில்கள் பல்வேறு மாவட்டங்களில் முடங்கியுள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன் கூறியதாவது: விலைவாசி உயர்வின் காரணமாக கட்டுமான வேலை நிறுத்தப்பட்டால் அடித்தட்டு மக்கள் வரை பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே தமிழக அரசு கட்டுமானப் பொருள்கள் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Source, Image Courtesy: Polimer




 


Tags:    

Similar News