தேர்தல் வாக்குறுதி எங்கே எனக்கேட்டு போராடிய 1100 போக்குவரத்து கழக ஊழியர்களை கைது செய்த தி.மு.க அரசு

அகவிலைப்படி உயர்வு நிலுவை தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 1100 போக்குவரத்துக் கழக ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-12-30 06:09 GMT

அகவிலைப்படி உயர்வு நிலுவை தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 1100 போக்குவரத்துக் கழக ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மன்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் சார்பில் ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 86 மாதம் நிலுவை தொகையை வழங்க வேண்டும், மாதத்தின் முதல் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள்.

பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்ட தலைமை அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட 1100 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஓய்வூதியம் சங்கம் சார்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஓய்வூதியர்களுக்கு 2015 நவம்பர் முதல் அகவிலைப்படி உயர்வு பாக்கியம் வழங்க வேண்டி நிதி உதவிய வணங்காமல் தி.மு.க அரசு தடையாணை பெற்றுள்ளது. தேர்தல் வாக்குறுதியை தி.மு.க அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்' எனக் கூறினார்.


Source - The Tamail Hindu

Similar News