மருத்துவர் சாந்தாவின் இறுதி ஊர்வலத்தில் பிரியாவிடை கொடுத்த செவிலியர்கள்!

மருத்துவர் சாந்தாவின் இறுதி ஊர்வலத்தில் பிரியாவிடை கொடுத்த செவிலியர்கள்!

Update: 2021-01-20 07:15 GMT

அடையாறு புற்றுநோய் மருத்துவர் சாந்தா இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை அப்போலா மருத்துவமனையில் இதயநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு மருத்துவ உலகில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டனர். இதனிடையே நேரில் சென்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.

மருத்துவர் சாந்தாவின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், புற்றுநோயாளிகளுக்கு மிகவும் நம்பிக்கை அளித்து வந்த சாந்தாவின் உடல் போலீஸ் மரியாதையுடன் பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலத்தின்போது பொதுமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கண்ணீர்மல்க தங்களது மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News