சென்னை: கடலில் குளிக்க முயன்றவர்ளை விரட்டி அடித்த போலீஸ் !

சென்னை மெரினா கடற்கரைக்கு பொது மக்கள் செல்வதற் அரசு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் குவிகின்றனர். அதிலும் இன்று (அக்டோபர் 17) ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

Update: 2021-10-17 11:17 GMT

சென்னை மெரினா கடற்கரைக்கு பொது மக்கள் செல்வதற் அரசு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் குவிகின்றனர். அதிலும் இன்று (அக்டோபர் 17) ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

கடந்த சில நாட்களாகவே மெரினா கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மெரினாவில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கடற்கரையில் பொதுமக்கள் குறிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மெரினா கடற்கரை முழுவதும் அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் பகுதி மற்றும் கடல் பகுதி ஆகியவற்றுக்கு பொதுமக்கள் சென்றுவிடாத படி போலீசார் கண்காணித்து வந்தபோதிலும் ஒரு சிலர் அத்துமீறி கடலில் குளிக்க முற்பட்டனர். அது போன்றவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News