'கிடுகு பட வசனம் எங்கள் மனதை புண்படுத்திவிட்டது' - காவல்துறையில் ஓடி சென்று புகார் அளித்த தி.க'வினர்

மேல்மிடாலத்தில் பஸ் சிறை பிடிப்பு விவகாரத்தில் இரண்டு பாதிரியார்கள் உட்பட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-24 13:09 GMT

மேல்மிடாலத்தில் பஸ் சிறை பிடிப்பு விவகாரத்தில் இரண்டு பாதிரியார்கள் உட்பட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருங்கல் அருகே உள்ள உதய மார்த்தாண்டம் ஜங்ஷனில் இருந்து கைதவிலாசம், மேம்பிலாகும் வழியாக செல்லும் கடற்கரை சாலை உள்ளது, இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டதால் மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தாத நிலையில் உள்ளது. இதனால் சாலை சீரமைக்க வேண்டும் எனப் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் தொடங்கப்பட்ட சீரமைப்பு சாலை பணி தொடங்கிய சில நாட்களை கிடப்பில் போடப்பட்டது, இதனை கண்டித்து மேல்மிடாலம் மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 4 அரசு பேருந்துகளை சிறைப்படுத்தினர், போராட்டத்தில் பாதிரியார்கள் ஹென்றி கிளாத், ஜீனியஸ் மற்றும் ஹெலன் நகர் மக்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மார்த்தாண்ட பணிமனை மேலாளர் ஸ்டாலின் போராட்டம் தொடர்பாக கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மேல் மிடாலத்தில் சட்டவிரோதமாக ஒன்றுகூடி அரசு பஸ் ஏற்கு விடாமல் சிறை படுத்த போக்குவரத்துக் கழகத்திற்கு இணைப்பு ஏற்படுத்தியதாக பாதிரியார்களை உட்பட 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கிறிஸ்துவ பாதிரியார்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்த செயல் அந்த மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Source - Top Tamil News

Similar News