நெகிழ்ச்சி -  அடையாரில் முதியோரின் கோரிக்கையை ஏற்று விரைந்து தீர்வளித்த பிரதமர் அலுவலகம்.!

நெகிழ்ச்சி -  அடையாரில் முதியோரின் கோரிக்கையை ஏற்று விரைந்து தீர்வளித்த பிரதமர் அலுவலகம்.!

Update: 2021-01-08 19:57 GMT

சென்னை அடையாறில் வசிக்கும் வயதான பிரதமர் அலுவலகத்தின் வலைத்தளத்தில் புகார் பதிந்த சில  சில நாட்களில், தாயான தெரு நாயும், அதன் குட்டிகளும் பத்திரமாக ப்ளூ கிராசிடம் கொண்டு சேர்க்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை அடையாறில் வசிக்கும் சுதா என்பவரின் வீட்டின் கொல்லைப்புறம், ஒரு தெரு நாய் 11 குட்டிகளை ஈன்றுள்ளது. அதன் அருகே யாரும் நெருங்கினால் கடிக்க முயற்சி செய்துள்ளது. வீட்டில் சுதாவும், அவரது வயதான தாயும் மட்டுமே உள்ளனர். அந்த நாயை பார்க்க பயமாகவும் பரிதாபமாகவும் இருந்த நிலையில்  கார்ப்பரேஷன், ப்ளூகிராஸ் என எல்லா இடங்களிலும் புகார் அளித்து அந்த நாயை கொண்டு செல்ல கோரிக்கை விடுத்துள்ளனர்.

 கார்ப்ரேஷன் ஊழியர்கள் நாய் பிடிக்க தகுந்த உபகரணங்கள் இல்லாமல் வந்தனர். இதனால் நாய் கடிக்க முயற்சி செய்ததால் திரும்பி சென்று விட்டனர். இந்நிலையில் நவம்பர் 23, 2020 அன்று இதுகுறித்து பிரதமர் அலுவலக வலைதளத்தில் சுதாவின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். சில மணி நேரங்களிலேயே புகார் பெறப்பட்டது என்ற உறுதி தகவலும், தீர்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்ற செய்தியும் வந்துள்ளது.

 இது தொடர்பாக எந்தத் துறை அலுவலகம், முகவரி, அதிகாரி பெயர், தொலைபேசி எண் ஈமெயில் விவரங்கள் எல்லாம் அனுப்பப்பட்டிருந்தது. அடுத்த தினம் அந்த புகார் வேறு ஒரு அதிகாரிக்கு செல்ல அவரை குறித்த விபரங்களும் பகிர்ந்து கொள்ளப் பட்டிருந்தன .

அதன்பிறகு கார்ப்பரேஷனில் 5 பேர் வந்து நாயையும், அதன் குட்டிகளையும் பிடித்துக் கொண்டு பத்திரமாக ப்ளு கிராசில் சேர்த்துள்ளனர். தமிழ்நாட்டின் அடையாரில் ஒரு மூலையில் வசிக்கும் ஒரு முதியோரின் புகாரை ஏற்று, தெரு நாயையும் அதன் குட்டிகளையும் பிரிக்கக்கூடாது என்ற மனிதாபிமானத்தோடு விரைவிலேயே நடவடிக்கை எடுத்து, பிரதமர் அலுவலகம் தனது பணியை செவ்வனே செய்துள்ளது அனைவரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது.

Credit: மின்னம்பலம்

Similar News