பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி - தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் அதிரடி கடிதம்

பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி புகார் தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2022-12-02 03:04 GMT

பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி புகார் தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதி உள்ளார்.

சென்னையில் செஸ் ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் இந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி நடந்தது, இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி இருந்ததாகவும் போலீசார் வைத்திருந்த மெட்டல் டிடெக்டர், டோர் மெட்டல் டிடெக்டர் போன்ற பல கருவிகள் வேலை செய்யவில்லை எனவும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தி இருந்தார்.

இது தொடர்பாக கடந்த மாதம் 29ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து சந்தித்து பிரதமர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குளறுபடிகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக டிஜேபி சைலேந்திரபாபு பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், பிரதமர் தமிழகம் வந்த போது அவர்களது பாதுகாப்பில் எந்த குறையும் இல்லை என தெரிவித்தார். இந்த நிலையில் அண்ணாமலை அளித்த புகார் மனு தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு தலைமைச் செயலாளர் இறையன்புக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Source - Dinamalar

Similar News