விடியல் ஆட்சியின் கொடுரம் ! பிஞ்சு குழந்தைகளுக்கு அழுகிய முட்டையை கொடுக்கும் அவலம் !
கரூரில் பிஞ்சு குழந்தைகளுக்கு சத்துணவில் வழங்கப்படுவதற்காக அழுகிய முட்டைகள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் பிஞ்சு குழந்தைகளுக்கு சத்துணவில் வழங்கப்படுவதற்காக அழுகிய முட்டைகள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் தொண்டமாங்கினம் ஊராட்சி, கவுண்டம்பட்டி என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக முட்டைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அப்படி கொண்டுவரப்பட்ட முட்டைகள் அனைத்தும் அழுகிய நிலையில் புழு பிடித்து மிகவும் துர்நாற்றம் வீசும் நிலையில் இருந்துள்ளது. இது பற்றி அப்பகுதி மக்களுக்கு தெரியவரவே முட்டை பற்றி சத்துணவு ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் பின்னர் அங்கிருந்தவர்கள் அழுகிய நிலையில் உள்ள முட்டையை வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. குழந்தைகள் சாப்பிடக்கூடிய முட்டையில் கூடவா தரமற்ற முறையில் வாங்குவதா என்ற கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மின்சாரத்துறை மற்றும் போக்குவரத்துறையில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: News J