பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு 20ம் தேதி தொடங்குகிறது !

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த மாதம் (செப்டம்பர் 17) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் மற்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்காக சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.

Update: 2021-10-18 03:47 GMT

இதில் மட்டும் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 7 ஆயிரத்து 324 பேர் சேர்த்தனர். இது மட்டுமின்றி சிறப்பு பிரிவில் உள்ள மாற்றுப்பிரிவினர் 473 இடங்களை தேர்வு செய்தனர். அந்த வகையில் சிறப்பு பிரிவு மூலம் 7 ஆயிரத்து 797 இடங்கள் நிரம்பியது. அதனையடுத்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்படும் என்று கலந்தாய்வை நடத்தும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலகம் அறிவித்திருந்தது. அதன்படி 4 சுற்று கலந்தாய்வும் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், துணை கலந்தாய்வு வருகின் 20ம் தேதி (புதன்கிழமை) தொடங்கி, 23ம் தேதி வரை (சனிக்கிழமை) வரை நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு மற்றும் சான்றிதழ் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. தரவரிசைப் பட்டியல் நாளை (செவ்வாய்கிழமை) வெளியிடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News