இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சில சொத்துக்களை பறிமுதல் செய்தது தமிழக அரசு.!
இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சில சொத்துக்களை பறிமுதல் செய்தது தமிழக அரசு.!;
சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதித்தது. இதனையடுத்து அவர்கள் மூன்று பேரில் இரண்டு பேர்களான சசிகலா, இளவரசி விடுதலை ஆகியுள்ளனர். சுதாகரன் இன்னும் விடுதலை பெறவில்லை.
இந்நிலையில், சசிகலா மற்றும் இளவரசி இன்று காலை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர். அதற்குள் தமிழக அரசு மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை செய்துள்ளது. சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான மேலும் சில சொத்துகளை தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி இளவரசி, சுதாகரனின் சொத்துகள் பலவற்றை தமிழக அரசு அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது. இன்றும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இருவருக்கும் சொந்தமான சில சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளது. இந்த சம்பவம் சசிகலா தரப்பை மிகவும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.