கோயிலுக்கு நேர்த்திக்கடன் விட்ட ஆட்டை திருடிய வாலிபர் கைது!

Update: 2022-04-05 12:38 GMT

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் விவசாயி ஆவார். இவரது மனைவி சாந்தி. இத்தம்பதிகள் தங்களது வேண்டுதலுக்காக ஆடு ஒன்றை வளர்த்து வந்தனர்.

அதன்படி அந்த ஆட்டை மேய்த்துவிட்டு வீட்டின் முன்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கட்டிவிட்டு இரவில் தூங்கியிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் கண்விழித்து வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்தபோது கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு காணாமல் போனது தெரியவந்தது. இதனால் கணவன் மற்றும் மனைவி இரண்டு பேரும் நள்ளிரவு முதல் அதிகாலை வரை பல்வேறு இடங்களில் சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கேயும் ஆடு கிடைக்கவில்லை. இதனால் திருடர்கள்தான் ஆட்டை திருடியிருக்க வேண்டும் என எண்ணினர்.

இது தொடர்பாக ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் கொடுத்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் ஆடு திருடர்களை தேடி வந்தனர். இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் ஜம்மணப்பட்டியை சேர்ந்த சக்திவேல் 22 என்ற வாலிபர் ஆடு திருடியது தெரியவந்தது. உடனடியாக ஆடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கோயில் ஆட்டை மீட்டு உரிமையாளரிடம் கொடுத்தனர். கோயிலுக்கு நேர்த்திக்கடனாக விட்ட ஆடு திருடுப்போன சம்பவம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News