செல்போன் பறித்து கொண்டு கூவத்தில் குதித்த திருடன்.. பதிலுக்கு போலீஸ் என்ன செய்தது தெரியுமா.?

செல்போன் பறித்து கொண்டு கூவத்தில் குதித்த திருடன்.. பதிலுக்கு போலீஸ் என்ன செய்தது தெரியுமா.?

Update: 2020-12-19 18:35 GMT

முதியவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு கூவத்தில் குதித்த கொள்ளையனை விடாமல் துரத்திய காவலருக்கு குவியும் பாராட்டுக்கள். சென்னை, எத்திராஜ் கல்லூரி அருகே உள்ள மேம்பாலம் வழியாக மாம்பழத்தை சேர்ந்த 63வயதான ரவிக்குமார் என்ற முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். இவர் பின்னால் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்திமுனையில் அவரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு ஓடியுள்ளான்.

அப்போது அந்த சாலை வழியாக வந்த சென்னை காவல் ஆணையரின் உதவியாளராக பணிபுரிந்து வரும் காவலர் தீபக் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். முதியவரிடம் செல்போன் பறித்துக் கொண்டு ஓடும் கொள்ளையனை பார்த்த காவலர் தீபக் அவனை துரத்திக் கொண்டு ஓடினார்.

இதனை கண்ட திருடன் அருகாமையில் இருந்த கூவம் ஆற்றில் குதித்துள்ளான். அப்போதுதான் காவலர் நம்மை விட்டுவிட்டு செல்வார் என்று. ஆனால் காவலர் சற்றும் எதிர்பாராதவிதமாக கூவம் ஆற்றில் குதித்தார். இதனை கண்ட திருடன் எதிர்கரை நோக்கி ஊர்ந்து சென்று கொண்டிருந்தான்.

இதனை கண்ட பொதுமக்கள் மற்ற காவலருக்கு தகவல் அளித்தனர். தகவலையடுத்து மற்றொரு கரையில் போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர்.

கொள்ளையனை பிடித்த போலீசார் அவனை எழும்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். கூவத்தில் குதித்து தப்ப முயன்ற செல்போன் கொள்ளையனை பிடிக்க கூவத்தில் குதித்த காவலரை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையன் பெயர் சேகர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையன் ஏற்கெனவே அதிகமான செல்போன் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

Similar News