ஊரக உள்ளாட்சி தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்பு!
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் உட்பட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றது. இதே போன்று 28 மாவட்டங்களில் காலியாக இருந்த பதவிகளுக்கு கடந்த 9ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியது.

இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி போட்டி மூலம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று (அக்டோபர் 20) காலை 10 மணிக்கு பதவி பிராமணம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi