தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வர் திருக்கோயிலில் தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அருர் தாலுகாவில் உள்ளது தீர்த்தமலை. இங்கு மாசி மகப்பெருவிழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு தேர் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் மட்டுமின்றி அண்டை மாவட்ட பக்தர்களும் ஏராளாமானோர்கள் வருகை தந்து தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்கின்றனர்.
அதே போன்று இன்று மதியம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏராளாமான பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம்பிடித்து இழுத்தனர். மேலும், திருவிழாவை முன்னிட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் உடனுறை அருள்மிகு வடிவாம்பிகை காட்சி தருகிறார்.