தேனி: கொரோனா வார்டில் இருந்து உறவினர்களை வெளியேற்றிய போலீஸ்.!
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்து வரும் நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்து வரும் நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுடன் அவர்களின் உறவினர்கள் இருப்பார்கள். வெளியில் சென்று மருந்து மற்றும் உணவுகளை வாங்கி வந்து நோயாளிகளுக்கு அளித்து வருகின்றனர்.
இதனிடையே உறவினர்கள் கொரோனா வார்டில் இருந்து வெளியே செல்லும்போது மற்றவர்களுக்கு எளிதில் தொற்று பரவி விடுகிறது. இதனால் உறவினர்களை வார்டில் அனுமதிக்க வேண்டாம் என மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இதனை தொடர்ந்து கொரோனா வார்டில் இருக்கும் நோயாளிகளின் உறவினர்களை போலீசார் கவச உடையில் சென்று வெளியேற்றினார்கள்.
இதே போன்று தமிழகத்தில் உள்ள மற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளவர்களின் நோயாளிகளின் உறவினர்களையும் வெளியேற்றி வந்தால், மற்றவர்களுக்கு தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பது மருத்துவர்களின் குரலாக அமைந்துள்ளது.