தமிழகத்தில் மேலும் 246 ஐ.டி. கம்பெனிகள் அமைக்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.!
தமிழகத்தில் மேலும் 246 ஐ.டி. கம்பெனிகள் அமைக்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.!;
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் மாநில அளவிலான கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காணொளி வாயிலாக வருவாய் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.
அப்போது தமிழகத்தில் ஐடி கம்பெனிகளின் நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின்போதும் தகவல் தொழில்நுட்பத் துறை தடையில்லாமல் செயல்பட்டு வந்தது.
தமிழகத்தில் உள்ள 18 ஐ.டி. நிறுவனங்கள் வழியாக சுமார் 4 லட்சம் பட்டதாரிகளுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடத்திற்கும் 90 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. மேலும் வருகின்ற காலங்களில் 246 தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தமிழகத்தில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.