சோம ஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு! நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்!

Update: 2022-07-10 09:00 GMT

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சோம ஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடத்திருப்பதாக முகாந்திரம் உள்ளது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் கூறியுள்ளனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை என்பது சிவன், பார்வதி, முருகன் உள்ளிட்டோர் இணைந்து இருக்கும் சிலை வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் கடந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும்.

இந்நிலையில், இக்கோயிலில் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் இதற்கு பதிலாக வேறு ஒரு தங்க சிலை செய்யப்பட்டது. இச்சிலையை ஸ்தபதி முத்தையா என்பவர் மூலம் வடிவமைக்கப்பட்டது. இதற்கு என்று 100 கிலோ தங்கம் வசூல் செய்யப்பட்டது. ஆனால் இச்சிலையில் ஒரு துளி தங்கம் கூட இல்லை என அண்ணாமலை என்பவர் புகார் அளித்திருந்தார்.

அதன்படி சிலை கடத்தல் பிரிவு போலீசார் கடந்த 2019ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடையதாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீர சண்முகமணி, திருப்பணிப் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா மற்றும் ஸ்தபதி முத்தையா, ஸ்தனிகர்கள் உட்பட 9 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் ஆணையர் கவிதா மற்றும் முத்தையா ஸ்தபதி உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஜெயசந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் உள்ளது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கும் நிலையில், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். இதனால் மீண்டும் இந்த மனு மீதான விசாரணை வருகின்ற ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Source, Image Courtesy: Samayam

Tags:    

Similar News