3 தலைமுறை வீடுகளில் கதவு இல்லை.. திருடு இல்லை.. இப்படி ஒரு கிராமம் தமிழகத்தில் உள்ளதா.?

3 தலைமுறை வீடுகளில் கதவு இல்லை.. திருடு இல்லை.. இப்படி ஒரு கிராமம் தமிழகத்தில் உள்ளதா.?

Update: 2020-11-30 08:50 GMT

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே 3 தலைமுறைகளாக தங்களது பாரம்பரியத்தை பின்பற்றி வீடுகளில் கதவு இன்றி ஒரு கிராமமே வசித்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கமுதி அருகே உள்ளது பாப்பனம் கிராமம். இந்த கிராமத்தில் 150க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் விவசாயம், கால்நடை மேய்ச்சல் போன்றவை பிரதான தொழில் ஆகும். கிராமத்தில் தற்போது வரை குடிசை, ஓட்டு, மாடி வீடு என எந்த வீடு கட்டினாலும் நுழைவு வாயிலில் நிலை இருக்குமே தவிர கதவு வைப்பது இல்லை. அப்படி கிராமத்தில் கதவுகள் வைத்து வீடு கட்டினால் குடும்பத்தில் ஏதாவது தடங்கள் வரும் என்பது அவர்களின் ஐதீகம்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் கதவு வைத்து வீடு கட்டியதால் குடும்பத்தில் பல்வேறு கஷ்டங்கள் ஏற்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஊராட்சிமன்றத் தலைவர் அமுதா கூறியதாவது: பாப்பனம் கிராமத்தில் கடந்த 3 தலைமுறைகளாக வீடுகளில் கதவு வைக்கப்படாமல் பாரம்பரியத்தை கடைபிடித்து வருகின்றோம்.

கிராம மக்கள் வெளியூர் போகவேண்டும் என்றால் வாசலில் துணிகளை வைத்து மறைப்பாக தொங்க விட்டு காற்றில் பறக்காமல் இருப்பதற்கு செங்கற்களை வைத்து செல்வர். அதுவும் வீடுகளில் கால்நடைகள் நுழையாமல் இருப்பதற்காக தான். இந்த கிராமத்தில் திருடு இதுவரை நடந்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார். இப்படி ஒரு கிராமம் தமிழகத்தில் உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

Similar News