சென்னையில் இந்த வருடம் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது: பொதுப்பணித்துறை தகவல்.!

சென்னையில் இந்த வருடம் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது: பொதுப்பணித்துறை தகவல்.!

Update: 2021-02-05 08:28 GMT

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர் மழை பெய்தது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது.
அதே போன்று சென்னையில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும், புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளும் தனது முழு கொள்ளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிருஷ்ணா நதி நீர் மூலமாக இதுவரை 7 டிஎம்சி நீர் கிடைத்துள்ளதால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. தற்போது வரை 7 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளது. இந்த ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. கோடைக்காலம் வந்துவிட்டாலே குடிநீருக்காக சென்னை மக்கள் தவித்து வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் முற்றிலும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News