பாக்கி தொகையை தர தாமதம், ஒப்பந்தக்காரர் தான் பதித்த கற்களை பெயர்த்தெடுத்து கெத்து ! திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு !

Update: 2021-10-08 13:47 GMT

கடந்த 2019ஆம் ஆண்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வளாகங்களில் பல்வேறு பகுதிகளில் 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நடைபாதைகளில் சிமெண்ட் கற்களை பதிக்க ஒப்பந்த அடிப்படையில் அமைத்துக் கொடுக்க ஆறுமுகநேரி சேர்ந்த சண்முகம் என்ற ஒப்பந்தக்காரர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.இந்தப் பணிக்காக ரூபாய் 3 லட்சத்து 65 ஆயிரம் தொகையான திருக்கோயில் பொறியாளரிடம்  சண்முகம் பெற்றுக்கொண்டார். இரண்டு ஆண்டுகள் கழித்தும் மீதமுள்ள  89,000 தொகையினை பொறியாளர் கொடுக்கவில்லை. 

அதனால் ஆத்திரம் அடைந்த சண்முகம் தனக்கு தரவேண்டிய பணத்தை கோவில் அதிகாரிகளும்  மோசடி செய்து விட்டதை அறிந்து, தனது பணியாளர்களை கொண்டு கோயில் வளாகத்தில்  தான் பதித்த  கற்களை பெயர்த்து  எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த கோயில் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி,  இளநிலை பொறியாளர் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் கற்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுவர்களை  தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தான் கடன் வாங்கி ஒப்பந்தப்படி பணிகளை  மேற்கொண்டதாகவும், தனக்கு வர வேண்டிய தொகையை அப்போதுள்ள ஒப்பந்தகாரர்கள் திருப்பி செலுத்தவில்லை என்றும் சண்முகம் குற்றம் சாட்டினார். அதிகாரிகள் மேலும் சண்முகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும் , தொடர்ந்து சண்முகம் தான் பதித்த கல்லை எடுப்பதில்  முனைப்பு காட்டியதால் அதிகாரிகள் விழிபிதுங்கி நின்றனர். இதையடுத்து திருக்கோயில் பொறியாளர் பாக்கி தொகையை உரிய பணத்திற்கான காசோலையை ஒப்பந்ததாரரிடம் வழங்கியதோடு பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதையடுத்து  கற்களை  பெயர்தெடுக்கும்  செயல்களை விட்டுவிட்டு  தனது பணியாளர்களுடன்  நகர்ந்து சென்றார்.

Image : OYO

Polimer

Similar News