தேரோட்டம் ரத்து.. பக்தர்களுக்கு அனுமதியில்லை.. திருவண்ணாமலை கலெக்டர்.!

தேரோட்டம் ரத்து.. பக்தர்களுக்கு அனுமதியில்லை.. திருவண்ணாமலை கலெக்டர்.!

Update: 2020-11-13 16:21 GMT

கொரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலை தீப திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், தீப திருவிழாவின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் மாவட்ட கலெக்டர் கந்தசாமி கூறியுள்ளார். 

இது பற்றி அவர் கூறியதாவது: திருவண்ணாமலை தீப திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. பவுர்ணமி கிரிவலம் செல்லவும் தடை செய்யப்படுவதுடன், மாடவீதிகளில் நடக்கும் விழா ரத்து செய்யப்பட்டு கோவில் பிரகாரத்தில் சுவாமி வீதி உலா நடக்கும். திருவிழாவின் போது நாள் ஒன்றுக்கு 5,000 பேர் அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கும் அனுமதி உண்டு.

மகாதீபத்தன்று மலை ஏற முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரணி தீபம், மகாதீபம் கோவிலில் சென்று பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்படுவதுடன், நேரடியாக ஊடகங்கள் வாயிலாக பார்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News