பொதுமக்கள் பயன்படுத்தும் வழியை மறித்து சுற்றுச்சுவர் கட்டிய சர்ச்

பொதுமக்கள் பயன்படுத்தும் வழிகளை மறைத்துக் கட்டிய சர்ச் சுற்றுச்சுவர் பிரச்சினை சமாதான கூட்டம்.

Update: 2022-04-18 14:18 GMT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள இருதயபுரம் ஆண்டவர் கோவிலில் சுற்றுச்சுவர் கட்டுவது தொடர்பாக தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. திண்டிவனம் சந்தைமேடு அடுத்த இருதயபுரம் பகுதியில் இருதய ஆண்டர் கோவிலில், சுற்றுச்சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த நிர்வாகம் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுவான வழிகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் விதமாக சுற்றுசுவர் பகுதிகளைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 6ம் தேதி, திண்டிவனம் சப் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


இந்த பிரச்சினை தொடர்பாக திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை சமாதான கூட்டம், தாசில்தார் வசந்தகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. ரோஷணை இன்ஸ்பெக்டர் பிருந்தா, மண்டல துணை தாசில்தார் விமல், வருவாய் ஆய்வாளர் செல்வம், இருதய ஆண்டவர் கோவில் நிர்வாகி சவரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், பொதுமக்களை பாதிக்காத வகையில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என வருவாய்த்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.


இதைத்தொடர்ந்து இருதய ஆண்டவர் கோவில் நிர்வாகி சவரிமுத்து, பிரச்னை குறித்து பிஷப்பிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். எனவே சர்ச் நிர்வாகம் இதுபோன்ற இனி போன்ற செயல்களில் எடுபடாது என்றும் கூறப்படுகிறது. மக்கள் பயன்படுத்தும் பொதுவான வழிகளை மறைத்து சுற்றுசுவர் கட்டுவது தவறு என்பதையும் சர்ச் நிர்வாகம் ஒப்புக்கொண்டு உள்ளது. 

Input & Image courtesy: Dinamalar news

Tags:    

Similar News