திருச்செந்தூர் முருகன் கோவிலில் இரவு நேரங்களில் கொட்டும் மழையில் பக்தர்களை விரட்டி அடித்த காவல்துறை ! பக்தர்களுக்காக போராடிய பா.ஜ.க.வினரும் கைது!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று (நவம்பர் 6) இரவு தங்கியவர்களை கொட்டும் மழை என்றும் பாராமல் விரட்டி அடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று (நவம்பர் 6) இரவு தங்கியவர்களை கொட்டும் மழை என்றும் பாராமல் விரட்டி அடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வருகை தருகின்றனர். அது போன்று வந்த பக்தர்கள் இரவு நேரங்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்குவது இல்லை. இதனால் இரவு முழுவதும் கோவில் வளாகத்திலேயே வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவது வழக்கம். அப்படி இடம் கிடைக்காத பக்தர்கள் விடுதிகளில் தங்கி அதிகாலையில் தரிசனத்திற்கு வருகை புரிவர்.
அது போன்று நேற்று இரவு (நவம்பர் 6) கல்மண்டபங்களில் தங்கியவர்களை சுமார் 9.30 மணியளவில் "பக்தர்கள் யாரும் கோவிலில் இருக்க வேண்டாம்" என்று நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் வந்து பக்தர்களை உடனடியாக வெளியேறுமாறு கூறினர். இதனால் வயது முதிர்ந்த பக்தர்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்த பெண் பக்தர்கள், சிறு பிள்ளைகள் என்றும் பாராமல் இரவு கொட்டும் மழையில் விரட்டி அடித்துள்ளனர். இதனால் வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையில் சாலையில் உறங்கிய காட்சி, காண்போர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
"தியேட்டர்களில் அவ்வளவு கூட்டம் கூடி படம் பார்க்கின்றனர். ஆனால் அங்கு பரவாத கொரோனா கோவிலுக்கு வந்துள்ள பக்தர்களிடம் பரவுமா" என்றனர். இதனை கேட்டுக்கொள்ளாத போலீசார், பாஜக நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்தது. இந்த சம்பவத்தால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும் அங்கு வந்திருந்த பக்தர்கள் இது போன்று அராஜகத்தில் ஈடுபடுவது சரியில்லை. பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு எங்களை மழையில் விரட்டி அடிப்பதை அந்த முருக பெருமான் உங்களை சும்மா விடமாட்டார்கள் என்று சாபம் விட்டனர்.
இதுவே ஒரு சர்ச்சிலோ அல்லது தர்காவிலோ போலீசார் அத்துமீறி நுழைந்து அராஜத்தில் ஈடுபடுவார்களா என இந்துக்கள் கேள்வி எழுப்பினர். இது போன்று தொடர்ந்து திமுக அரசு இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது.
Source, Image Courtesy: Social Media