திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள சம்பவம் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள சம்பவம் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சஷ்டி திருவிழா வருகின்ற 4ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதி நிறைவடைய உள்ளது. விழாவின் உச்ச நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 9ம் தேதி நடைபெறுகிறது. 10ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த இரண்டு நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று போல கடந்தாண்டை போன்று இந்த ஆண்டும் பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடைபெறுவது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று குறைந்து வரும் நிலையில் ஏன் கோயிலுக்கு மட்டும் இவ்வளவு கெடுபிடி எனவும் இந்துக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Source, Image Courtesy: Puthiyathalamurai