திருத்தணி முருகன் கோயிலில் வழிபாடு செய்ய தடையா?

Thiruthani Murugan Temple will be closed for the next 5 days. Pilgrimage upsets by the government decision.

Update: 2021-07-31 07:53 GMT

ஆடி மாதம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். முருகப்பெருமானுக்கு கிருத்திகை மிகவும் உகந்த நாளாகும். அதிலும் ஆடி மாதம் வரும் கிருத்திகை மிகவும் விசேஷமாக கருதப்படும். இந்த நாட்களில் பக்தர்கள் முருகன் கோயில்களுக்கு காவடி எடுத்து சென்று வழிபாடு செய்வார்கள். 

இந்நிலையில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடாகத் திகழ்வது திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும். இதனிடையே ஆடிக்கிருத்திகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்தும் ரத்துசெய்யப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் பக்தர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு காவடி எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது.

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் கூடினால் கொரோனா பரவும் ஆபத்து உள்ளதால் திருத்தணி முருகன் கோயிலுக்கு இன்று முதல் 4ம் தேதி வரை பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News Source: Maalaimalar

Image Source :Mandirmandir

Tags:    

Similar News