தருமபுரியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: அதிர்ச்சி தகவல்!
தருமபுரியில் வெளிபேட்டை தெருவில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 11 ஆயிரம் சதுரஅடி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிலங்கள் மீட்பு அமைப்பின் திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இது பற்றி அவருக்கு கிடைத்த தகவலின்படி, அங்கு சென்று இடங்களை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் கோயில் இடத்தில் இருந்து காலி செய்ய மறுத்து வருகின்றனர். மேலும், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கழிவுகள் அதிகப்படியாக உள்ளது.
மேலும், அங்காளம்மன் கோயிலுக்கு சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 ஆயிரம் சதுர அடி நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் சொத்துக்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டும், அதனை அதிகாரிகள் முறையாக செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே இங்குள்ள அங்காளம்மன் கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கின்ற பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
Source, Image Courtesy: Samayam