தூத்துக்குடி: கனிமொழி முன்னிலையிலேயே தி.மு.க - ம.தி.மு.கவினர் மோதல்.!
தூத்துக்குடி: கனிமொழி முன்னிலையிலேயே தி.மு.க - ம.தி.மு.கவினர் மோதல்.!
தூத்துக்குடி நாடாளுமன்ற தி.மு.க எம்.பி கனிமொழி, கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் நவம்பர் 3ம் தேதியன்று கலந்து கொண்டு பேசினார். தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட உயரமின்கோபுரம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது, கூட்டணிக் கட்சியான ம.தி.மு.கவின் பெயரை குறிப்பிட்டு கூறாததால் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதிய ம.தி.மு.கவை சேர்ந்த பசுபதி என்பவர் ஆத்திரம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் கனிமொழி முன்னிலையிலேயே தி.மு.க மற்றும் ம.தி.மு க வினர் இடையே மோதல் உண்டானது. அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அங்கே பரபரப்பு நிலவியது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூட்டணிக் கட்சிகளுக்குள் மோதல் வருவது சகஜம் என்றாலும், கட்சியின் முக்கியப் பிரமுகர் முன்னிலையிலேயே சண்டையிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் கட்சியினர் என இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.