தூத்துக்குடி எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி.. முதலமைச்சர் அறிவிப்பு.!

தூத்துக்குடி எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி.. முதலமைச்சர் அறிவிப்பு.!

Update: 2021-02-01 15:19 GMT

தூத்துக்குடி அருகே லாரி ஏற்றி கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பாலு. இவர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முருகவேல் என்பவர் குடிபோதையில் சுற்றி திரிந்துள்ளார். இதனை பார்த்த உதவி ஆய்வாளர் பாலு அவரை கண்டித்தாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த முருகவேல், காவல் ஆய்வாளர் பாலு மீது லாரியை ஏற்றியுள்ளார். இதில் உதவி ஆய்வாளர் பாலு சாலையில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட முருகவேலை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டது. இதனை அறிந்த கொண்ட முருகவேல் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில், லாரி ஏற்றிக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணத்தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் உதவி ஆய்வாளர் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் எனவும் அறிவிப்பில் கூறியுள்ளார்.

காயமடைந்த காவலர் பொன் சுப்பையாவுக்கு ரூ.2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உதவி ஆய்வாளர் ஒருவர் லாரி ஏற்றிக்கொள்ளப்பட்ட சம்பவம் அம்மாவட்ட போலீசாரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Similar News