கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரதடை: கிருஷ்ணகிரி ஆட்சியர் உத்தரவு!

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு தடை விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-01 10:43 GMT

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு தடை விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுக்கும் விதமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகம் உட்பட பெரும்பாலான இடங்களில் இன்னும் ஒரு சிலர் தடுப்பூசி முதல் டோஸ் போடாமல் ஏமாற்றி வருகின்றனர். அது போன்றவர்களுக்கு எவ்வளவு சொல்லியும் கேட்பதில்லை.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். ஒமைக்கான் கொரோனா வைரஸ் தொற்று தடுக்கின்ற வகையில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளார்.

அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10,86,500 பேர் பொது இடங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு இன்று முதல் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான குறுஞ்செய்தியை காண்பிக்க வேண்டும். அதே சமயத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரும்பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

Image Courtesy: The New Indian Express


Tags:    

Similar News