எல்லையில் முகாமிட்டுள்ள ஆயிரக்கணக்கான வௌவால்கள் ! நிபா வைரஸ் அச்சத்தில் தமிழக மக்கள் !

கேரளாவில் வௌவால்களால் நிபா வைரஸ் பரவியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் தமிழக, கேரள எல்லையில் உள்ள எருமாடு என்ற இடத்தில் சுமார் ஆயிரக்கணக்கான வௌவால்கள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Update: 2021-09-13 02:41 GMT

கேரளாவில் வௌவால்களால் நிபா வைரஸ் பரவியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் தமிழக, கேரள எல்லையில் உள்ள எருமாடு என்ற இடத்தில் சுமார் ஆயிரக்கணக்கான வௌவால்கள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.

யூகலிப்டஸ் மரங்களை வாழ்விடமாகக் கொண்ட வௌவால்கள், இரவு நேரங்களில் உணவு தேடி ஊருக்குள் சுற்றித்திரிந்து விட்டு காலையில் மீண்டும் அதே மரங்களுக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் கேரளாவில் வௌவால்களால் நிபா வைரஸ் பரவியது கண்டுப்பிடிக்கப்பட்டது. வௌவால்கள் கடித்த பழங்களை உட்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வௌவால்களை விரட்ட வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவி வரும் நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான வௌவால்கள் முகாமிட்டுள்ள சம்பவம் தமிழக கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Thamarai Tv

Tags:    

Similar News