ஆயிரக்கணக்கில் மதுரையில் கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்கள் - யாருடையது தெரியுமா?
மதுரை தனியார் மனமகிழ் மன்றத்தில் ஆயிர கணக்கில் மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை தனியார் மனமகிழ் மன்றத்தில் ஆயிர கணக்கில் மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் தனியார் மனமகிழ் மன்றத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்த 628 மதிப்பாற்றல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த மது பாட்டில்கள் அனுமதிக்கப்படாத நேரத்தில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
மேலப் பெருமாள் மேஸ்திரி வீதியில் பணச் செல்வம் என்பவருக்கு சொந்தமான தனியார் மனமகிழ் மன்றத்தில் நடத்தப்பட்ட போலீஸ் சோதனையில் இவைகள் சிக்கின. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேலாளர் மகாராஜனை கைது செய்தார் உரிமையாளர் பணசெல்வத்தை தேடி வருகின்றனர்.