கேரளாவில் இருந்து கோவைக்கு மது கடத்திய 3 பேர் கைது.!

கேரளா மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து கார் மற்றும் ரயில் மூலமாக மதுபானங்களை கடத்தி வந்து கோவையில் கூடுதலான விலைக்கு விற்று வருகின்றனர். இதனை தடுக்கு போலீசார் பல்வேறு வழிகளில் முயன்றும் எப்படியேனும் மதுவை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-06-26 10:48 GMT

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் மதுபானக் கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மது வாங்குவதற்காக பக்கத்து மாவட்டம், மாநிலத்திற்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து கார் மற்றும் ரயில் மூலமாக மதுபானங்களை கடத்தி வந்து கோவையில் கூடுதலான விலைக்கு விற்று வருகின்றனர்.இதனை தடுக்கு போலீசார் பல்வேறு வழிகளில் முயன்றும் எப்படியேனும் மதுவை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.




 


இந்நிலையில், கேரளாவில் இருந்து கோவைக்கு ரயிலில், மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரயில்வே போலீசார் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Similar News