வழிபாட்டு தலங்களில் நேரக்கட்டுபாடு தளர்வு.. முதலமைச்சர் உத்தரவு.!

வழிபாட்டு தலங்களில் நேரக்கட்டுபாடு தளர்வு.. முதலமைச்சர் உத்தரவு.!

Update: 2020-12-31 19:41 GMT

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளங்களுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு இந்த நோய் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினால் பொது மக்களின் ஒத்துழைப்பினாலும் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து நோய்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேர கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து வழிபாட்டு தளங்களிலும் வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுக்கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில் மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News