திருச்செந்தூரில் கிறிஸ்தவ திருச்சபை தேர்தலில் அரிவாள் வெட்டு ! அதிர்ச்சி வீடியோ வெளியீடு !

திருச்செந்தூரில் கிறிஸ்தவ திருச்சபை தேர்தலில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-04 04:07 GMT

திருச்செந்தூரில் கிறிஸ்தவ திருச்சபை தேர்தலில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி நாங்குநேட் திருமண்டல தேர்தல் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின்போது திருச்சபை பணியாளர் சுந்தர் என்பவர் ஒருதரப்பிற்கு ஆதரவாகவும், ஞானய்யா என்பவர் மற்றொரு தரப்பிற்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தேர்தல் பிரச்சனை தொடர்பாக ஞானய்யா சுந்தரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுந்தரின் ஆதரவாளரான சிலர் ஞானய்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஞானய்யாவின் தங்கை தடுக்க முயன்றுள்ளார். அப்போது இரண்டு பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த இருவரும் திருச்செந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வீடியோவை அங்கிருந்த ஒருவர் எடுத்துள்ளார். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: One India Tamil

Image Courtesy:Justdial

Tags:    

Similar News