திருச்சியில் இரவு ஊரடங்கின்போது விமான சேவைக்கு தடை.!
திருச்சியில் இரவு நேரங்களில் விமானங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. அதே போன்று திருச்சியில் இரவு நேரங்களில் விமானங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. அதில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேரஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், திருச்சி விமான நிலைய ஓடுதளம் பலப்படுத்தும் பணி நடைபெற்று வந்ததால், இரவு 11.30 மணி முதல் காலை 8 மணி வரை விமானங்கள் தரை இறங்குவதற்கு தடை உள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை விமானகள் இயக்குவதற்கு விமான நிலைய ஆணையத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த முறை நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை இந்த தடை தொடரும் என கூறப்படுகிறது.