காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு விசாரணை கைதி மரணம் - தொடரும் சோகங்கள், அமைதி காக்கும் அரசு!
போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து சென்றவர் திடீரென்று மர்ம சாவு.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து செல்வதற்காக திரளாக பக்தர்கள் நேற்று வந்திருந்தார்கள். இதில் ஒரு பக்தரிடம் செல்போன் திருடன் என்றதாக ஒருவரை கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பிடித்து, சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பதாக கூறி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் அரியலூர் மாவட்டம் ஓரியூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பதும் தெரிய வந்தது. அவரை போலீஸ் நிலையத்தில் உள்ள சிறை அருகில் போலீசார் வைத்திருந்ததாகவும் தெரிய வருகிறது. இந்நிலையில் அவர் போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறையின் ஜன்னல் கம்பியில் தனது இடுப்பில் கட்டு இருந்த அரைஞாண் கயிற்றினால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று காலை 11 மணி அளவில் நடந்ததாக தெரிகிறது. ஆனால் மாலை 4 மணி வரை முருகானந்தத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக போலீசார் எடுத்து செல்லவில்லை. இது பற்றி தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் வந்தார்கள். அவர்கள் அங்கு பணியில் இருந்த போது சாரிடம் விசாரணை நடத்தினார்கள். முருகானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அம்பலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தார்கள்.
இடுப்பில் கட்டி இருக்கும் அரைஞாண் கயிற்றால் ஒருவர் எப்படி தூக்கு போட்டு இறக்க முடியும்? என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது என்றும், சமூக ஆர்வலர்கள் கூறியிருக்கிறார்கள். இந்து சம்பவம் குறித்து லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்று உள்ளதாகவும் தெரியவருகிறது. 2021 ஆம் ஆண்டு தனது தாயே கொலை செய்வதாக அவர் மீது வழக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Input & Image courtesy: Hindu News