கொரோனாவால் தடைப்பட்ட மக்கள்குறை தீர்வு கூட்டம் மீண்டும் நடைபெறும்.. திருநெல்வேலி ஆட்சியர்.!

கொரோனாவால் தடைப்பட்ட மக்கள்குறை தீர்வு கூட்டம் மீண்டும் நடைபெறும்.. திருநெல்வேலி ஆட்சியர்.!;

Update: 2021-02-06 08:37 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவந்த குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனிடையே மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆலோசனை நடத்தினார். கொரோனா ஊரடங்கில் உள்ள சில தளர்வுகளை அறிவித்தார். அதில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தலைமையில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக காணொலி காட்சி மூலம் நடைபெற்று வந்த நிலையில், முதலமைச்சர் ஆணையின்படி மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு அவர்களால் நேரடியாக மனுக்கள் பெரும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் 01.02.2021 முதல் திங்கட்கிழமை தோறும் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது.

எனவே பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது கோரிக்கையை விபரங்களுடன் மனு செய்து பயன் பெறுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அதே சமயத்தில் குறைதீர்க்கும் முகாமில் மனு செய்பவர்கள் கட்டாயமாக ஆதார் எண் மற்றும் கைபேசி எண்ணை குறிப்பிடவும் அறிவுறுத்தியுள்ளார். 
 

Similar News