திருப்பூர்: மாநகராட்சி பள்ளியில் மதமாற்ற பிரச்சினை பெற்றோர்கள் புகார்!

மாநகராட்சி பள்ளியில் மதமாற்றம் குறித்த பிரச்சினை மன உளைச்சல் ஏற்படுத்துவதாக பெற்றோர்கள் புகார்.

Update: 2022-04-25 02:23 GMT

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர் ஒருவரின் மதமாற்ற நடவடிக்கை காரணமாகவும் மாணவி ஒருவர் மன உளைச்சலை ஏற்படுத்திய தாக்கமும் அந்த மாணவியின் பெற்றோர் தற்பொழுது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளிக்கிறார். ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் மதரீதியாக வேறுபாடு காட்டியதாகவும், மேலும் மத மாற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 


இதுகுறித்து, மாணவியின் தந்தை, வடக்கு போலீசில் புகார் அளித்தார். மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன் மூன்று நாட்களாக பள்ளியில் விசாரணை நடத்தினார். புகார் அளித்த மாணவி, பெற்றோர், சம்பந்தப்பட்ட ஆசிரியர், சக வகுப்பு மாணவியர், பிற ஆசிரியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதுவே பள்ளிகளில் இத்தகைய மதமாற்ற செயல்களினால் குழந்தைகள் மிகவும் மன உளைச்சலை அடைவார்கள் என்பது ஆசிரியர்களுக்கும் முன்கூட்டியே இதுபோன்ற பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 


மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலரிடம், மாணவியின் தந்தை நேற்று அளித்த புகாரில் இது பற்றிக் கூறுகையில், ஆசிரியையின் செயலால் என் மகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பள்ளியில் விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள் சமரசம் பேச முயற்சிக்கின்றனர். குழந்தைகள் நல ஆணையம் இப்புகாரை விசாரித்து உரிய நீதி பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தற்போது இந்து முன்னணி சார்பில் இந்தப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை முறையாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு வரும் 26ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாகவும் திட்டமிட்டுள்ளார்கள். 

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News