திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சூடான் நாட்டு இளைஞர் கைது.!
திருப்பூர் மாவட்டத்தில சட்டவிரோதமாக தங்கியிருந்த சூடான் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில சட்டவிரோதமாக தங்கியிருந்த சூடான் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூடான் நாட்டை சேர்ந்தவர் முகமது அல்மும்ஹாலித் 22, இவர் கடந்த 2018-ம் ஆண்டு சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளார். இதன் பின்னர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி கோயில் அருகே உள்ள தண்டபாணி காம்பவுண்ட் பகுதியில் தங்கியுள்ளார். இவரது விசாகாலம் முடிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வேலை தேடி ஈரோட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் கோவைக்கு முகமது திரும்பியுள்ளார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது வாகனம் பெட்ரோல் இல்லாமல் வாகனம் நின்றுள்ளது.
இதனால் கையில் பணம் இல்லாத நிலையில், அருகில் இருந்த சிலரிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் சுற்றுலா விசாவில் வந்து தங்கியது குறித்து போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீசார் முகமதுவை கைது செய்தனர். திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக வந்து தங்குபவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.