திருப்பூரில் பரிதாபம்: டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழப்பு!
திருப்பூர் அருகே உள்ள மங்கலம் சுல்தான்பேட்டையில் 12வயது மதிக்கத்க்க பள்ளி மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள மங்கலம் சுல்தான்பேட்டையில் 12வயது மதிக்கத்க்க பள்ளி மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், மங்கலம் அருகே உள்ள சுல்தான்பேட்டை வெங்கடேஸ்வராநகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுவனுக்கு கடந்த மாதம் 10ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறுவனை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில சமீபகாலமாக பருவமழை பெய்து வரும் நிலையில், டெங்கு, மலேரியா கொசுக்களின் உற்பத்திகள் அதிகரித்து பல்வேறு விதமான கொடிய நோய்களை பரப்பி வருகிறது. இதனை தடுக்க அரசு தவறி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதே போன்ற கருத்துக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் முன்வைத்துள்ளார் என்பத குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Hindu Tamil