திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: 19வது மாதமாக நீடிக்கும் தடையால் பக்தர்கள் ஏமாற்றம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கண்காணித்து கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பவுர்ணமி தினத்தில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், ஏமாற்றமும் தந்திருப்பதாக கூறுகின்றனர்.

Update: 2021-10-19 05:07 GMT

கொரோனா தொற்று குறைந்து வந்த காரணத்தினால் தமிழகத்தில் வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழிபாட்டு தலங்கள் திறந்திருக்கும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. இதனிடையே திருவண்ணாமலை மாவட்டம், அருணாசலேஸ்வரர் கோயில் அருகே உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 15ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு தொடர்ந்து தடை நீடிக்கும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம் மாதங்களாக கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy:The News Minute

Tags:    

Similar News