3ஆம் வகுப்பு தமிழக மாணவர்கள் பாதி பேருக்கு தமிழ் படிக்க தெரியவில்லை - தமிழக கல்வித்தரத்தின் அவலநிலை!

மூன்றாம் வகுப்பு தமிழக மாணவர்கள் பாதி பெயருக்கு சரிவர தமிழை படிக்க தெரியவில்லை என்று ஆய்வு முடிவில் தகவல்.

Update: 2022-12-07 09:19 GMT

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சமீபத்தில் நாடு முழுவதும் ஒரு ஆய்வை நடத்தியது. 86 ஆயிரம் மாணவர்கள் இடமிருந்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்நாட்டின் 336 பள்ளிகளை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் 2,937 பேர் கலந்து கொண்டார்கள். மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அடிப்படை கற்றல் ஆய்வு குறித்து நிறுத்தப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்நாட்டிலுள்ள மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பாதி பெயருக்கு தமிழ் சரியாக படிக்கத் தெரியாது என்று தெரிய வந்துள்ளது.


மேலும் 20% பேர் மட்டுமே மூன்றாம் நிலை தமிழ் உரையை புரிந்து கொள்வதில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டது. அதேபோல தமிழ்நாட்டின் 23 சதவீதமானவர்கள் மட்டுமே கண்டறிதல் பெருக்கல், வகுத்தல், கணக்கு எண்கள் மற்றும் வடிவங்களை கொண்ட அடிப்படைகளை கண்டறிதல், காலண்டர்களின் தேதிகள் மற்றும் மாதங்களை போன்ற கண்டறிதல் போன்ற குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 52 சதவீதமானவர்களால் நாற்காட்டில் தேதி மற்றும் மாதத்தை கூட சரியாக அடையாளம் காண முடியவில்லை. இதற்கு நேர்மாறாக தென் மாநிலங்களில் சிறந்த மூன்றாம் வகுப்பு மாணவர்களின் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.


NCERT தனது அறிக்கையில் 46 சதவீதமானவர்களால் மட்டுமே என்பது முதல் 100 எழுத்துக்களை தமிழில் சரியாகவும் சரளமாகவும் படிக்க முடிந்தது என்று கூறியுள்ளது. 47 சதவிதமானவர்களால் மட்டுமே என்பது சதவீத ஆங்கில வார்த்தைகளை சரளமாக படிக்க முடிந்தது என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் இதற்கு முக்கிய காரணமாக நோய் தொற்றின் போது பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இதற்கு முக்கிய காரணம், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் கற்பித்தல் கற்றல் நடவடிக்கைகளில் கண்காணிப்பு இல்லாதது. ஆகவே முக்கிய காரணம் என்று கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News